நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 7,500 சாலை பணியாளர்கள் பணியிடத்தை நிரப்ப முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 09, 2021

Comments:0

நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 7,500 சாலை பணியாளர்கள் பணியிடத்தை நிரப்ப முடிவு

தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 60 ஆயிரம் கி.மீ நீள சாலைகள் உள்ளன. இந்நிலையில், பெருகி வரும் போக்குவரத்துக்கு ஏற்ப சாலைகளை அகலப்படுத்துவது, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாலைகளை புதுப்பிப்பது, புதிய பாலங்கள், புறவழிச்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த சாலைககைளை பராமரிக்க 15 ஆயிரம் சாலை பணியாளர்கள் பணியிடங்கள் உள்ளது. குறிப்பாக, 8 கி.மீ நீள சாலைகளுக்கு 2 சாலை பணியாளர், 5 கி.மீ நீள சாலைகளுக்கு 2 சாலை பணியாளர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது 7500 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர் அலுவலகம் அனைத்து கண்காணிப்பு, கோட்ட பொறியாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதில், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் கட்டுபாட்டில் உள்ள சாலைகளை சாலை பணியாளர்களை கொண்டு நன்கு பராமரிக்க ஏதுவாக மற்றும் பயணியர் மாளிகைகளை நன்கு பராமரிப்பதற்காக பகல் மற்றும் இரவு நேர காவலர் பணியிடங்களின் பட்டியலை அனுப்பவேண்டும். அதில், பராமரிக்கப்படும் சாலைகளின் விவரம், ஒப்புதல் அளிக்கப்பட்ட சாலை பணியாளர் பணியிடங்கள் எண்ணிக்கை, தற்போது பணிபுரியும் சாலை பணியாளர்களின் எண்ணிக்கை, கூடுதலாக தேவைப்படும் சாலை பணியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை, அதேபோன்று பயணியர் மாளிகைகளின் எண்ணிக்கை, ஒப்புதல் அளிக்கப்பட்ட பயணியர் மாளிகை காவலர் பணியிடங்களின் எண்ணிக்கை, தற்போது பணிபுரியும் பயணியர் மாளிகை காவலர்களின் எண்ணிக்கை, கூடுதலாக தேவைப்படும் பயணியர் மாளிகை காவலர் பணியிடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக அனுப்ப வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews