இந்தியாவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.
கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வு:
இந்தியாவில் பல்வேறு படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மருத்துவ படிப்புக்கான நீட் என்றும் நுழைவுத்தேர்வு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. இதனால் ஏழை மாணவர்கள் தேர்வை சந்திப்பது பெரும் சவாலாக இருக்கும் எனக்கூறி தற்போது வரை தமிழகம் நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு நடப்பாண்டு நீட் தேர்வு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூன்றாம் கொரோனா அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதும் நுழைவுத்தேர்வு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாநில முதல்வர்களுடனான காணொலி ஆலோசனையின் போது தமிழக முதல்வர் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை தொடங்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என தமிழக எம்.பி.,க்கள் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாநில பல்கலைக்கழகங்களே தேர்வை நடத்துகின்றன. கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என தெளிவாக கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.