கொரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில் வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 6 – 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என உத்தரகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா தொற்று 2வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசுகள் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் முதற்கட்டமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இருப்பினும் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் மற்றும் பாடங்கள் எடுக்கப்பட்டன. தற்போது ஊரடங்கு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசி, முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகள் போன்றவற்றின் காரணமாக தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், அடுத்தகட்டமாக பள்ளி, கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்களை திறக்க மாநில அரசுகள் தயாராகி வருகின்றன. ஏற்கனவே சில மாநிலங்களில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. இதனை தொடர்ந்து தற்போது உத்தரகண்ட் மாநில அரசு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில், COVID-19 வழிகாட்டுதல்களுக்கு மத்தியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். மாணவர்களின் வருகை கட்டாயமாக இருக்காது, இருப்பினும், முகக்கவசங்களை அணிந்து கொள்வது, சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதும் அவசியம். விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.