நீட் தேர்வு செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் அறிவிப்பு போலியானது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு இந்த ஆண்டு நடைபெறுமா, நடைபெறாதா, தமிழ்நாட்டுக்கு எப்போது விலக்கு அளிக்கப்படும் என பல குழப்பங்களும், எதிர்பார்ப்புகளும் மாணவர்கள் மத்தியில் உள்ளன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாத நிலையிலும் நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதி நடத்தப்பட்டது. இது விமர்சனங்களையும் சந்தித்தது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டன. ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவோ, அல்லது தேர்வு நடைபெறுவதற்கான தேதியோ அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டதுபோல் ஒரு அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், “2021ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 5ஆம் தேதி நடத்தப்படும். பேனா, காகித முறையில் நேரடியாக இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் தேர்வு நடைபெறும்.தேர்வு, பாடத்திட்டம், வயது வரம்பு, இட ஒதுக்கீடு, தேர்வுக் கட்டணம், தேர்வு மையங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேசிய தேர்வு முகமை இயக்குநர் வினீத் ஜோஷி மறுப்பு தெரிவித்துள்ளார். “சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அறிக்கை போலியானது. என்டிஏ சார்பில் எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. அந்த அறிக்கை மார்பிங் செய்யப்பட்டதுபோல் தெரிகிறது. மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.