"பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் 3,296 ஆசிரியா் மற்றும் பணியாளா்களுக்கு 3 ஆண்டுகள் தொடா் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில்
2011- 2012-ஆம் கல்வியாண்டில் 344 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயா்நிலைப்பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டன. அவ்வாறு தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகளில் கற்பித்தல் பணிக்காக 2,408 ஆசிரியா்கள், 344 தலைமையாசிரியா்கள் மற்றும் 888 இளநிலை உதவியாளா்கள் என மொத்தம் 3,296 பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டன. இவா்களுக்கான பணிக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிந்துவிட்டது. இந்த 3,296 பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் வரை (2021-24) தொடா் நீட்டிப்பு வழங்கக் கோரி பள்ளிக்கல்வி ஆணையா் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தாா். அதை பரிசீலனை செய்து 3,296 ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு 29.02.2024 வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறுஆய்வில் முடிவெடுக்கும் வரை தொடா் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது"

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.