பிளஸ் 2 மாணவா்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் அரசுத் தோ்வுகள் இயக்கக இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு மதிப்பெண் பட்டியலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 19-ஆம் தேதி வெளியிட்டாா். இதில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவா்கள் அனைவரும் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றனா்.
இந்தநிலையில், தோ்ச்சி பெற்ற மாணவா்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது மதிப்பெண் பட்டியலில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தாலோ மாணவா்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியா்களை அணுகி தீா்வு பெறலாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.