கோவை மாநகராட்சி வழங்கும் ரூ.2 லட்சம் பரிசு – சூப்பர் அறிவிப்பு!
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை குறைக்க தினமும் 40க்கு மேற்பட்ட மையங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்ய சிறப்பான வலைதளத்தை உருவாக்குவது தொடர்பாக மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அதில் கோவை மாநிலத்தில் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட பகுதியாக இருந்தது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க தடுப்பூசி 40க்கு மேற்பட்ட மையங்களில் செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்கள் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. தினமும் 300 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் டோக்கன் பெறுவதற்காக பொதுமக்கள் முதல்நாள் இரவே தடுப்பூசி செலுத்தும் மையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் தடுப்பூசி செலுத்த அல்லது டோக்கன் பெற அதிக அளவில் மக்கள் கூடுவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது. மேலும் கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி செலுத்தும் மையங்களின் விவரங்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் முகாம் நடைபெறும் தினத்தன்று காலை தான் தெரிவிக்கின்றனர். இதனால் தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்ய சிறப்பான வலைத்தளத்தை உருவாக்க கோவை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 26 ஆம் தேதிக்குள் வலைதளத்தை உருவாக்கி அதனை பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளது.
இந்த வலைத்தளம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களின் விவரங்கள், முன்பதிவு, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் சான்று பெறுதல், தடுப்பூசிகள் செலுத்தியவர்களின் தரவுகள் உள்பட அனைத்து விவரங்களை பெறுவதற்கான வசதிகள் அந்த வலைத்தளத்தில் இருக்க வேண்டும் எனவும், சிறந்த வலைத்தளத்திற்கு ரூ.2 லட்சம் வரை பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.