பஞ்சாபில் ஜூலை 26 முதல் பள்ளிகள் திறக்க அனுமதி
பஞ்சாப் மாநிலத்தில் ஜூலை 26 முதல்10 முதல்12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. கரோனா இரண்டாம் அலை காரணமாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் கடந்த மே மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வந்தது. தொற்றின் பரவல் குறைந்ததையடுத்து இரவு நேர மற்றும் வார இறுதி பொதுமுடக்கங்கள் ரத்து, திரையரங்குகள் திறப்பு என படிப்படியாக தளர்வுகள் அளித்தது.
இந்நிலையில், தற்போது மாநிலத்தில் உள்ள பள்ளிகளை ஜூலை 26ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 10 முதல் 12ஆம் வரை மாணவர்கள் தடுப்பூசி செலுத்திய பின்பு தான் பள்ளிக்கு வரவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் தளர்வாக, உள்ளரங்கில் 150 பேரும், வெளியரங்கில் 300 பேருடஞும் 50 சதவீத இருக்கைகளுடன் நிகழ்ச்சியை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.