ஜூலை 26 முதல் பள்ளிகள் திறப்பு, ஜூலை 31க்குள் ஊழியர்களுக்கு தடுப்பூசி – மத்திய பிரதேச அரசு திட்டம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 24, 2021

Comments:0

ஜூலை 26 முதல் பள்ளிகள் திறப்பு, ஜூலை 31க்குள் ஊழியர்களுக்கு தடுப்பூசி – மத்திய பிரதேச அரசு திட்டம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஜூலை 26 ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:

கொரோனா 2 ஆம் அலை பரவலை கருத்தில் கொண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் ஜூலை 26 ஆம் தேதி முதல் பள்ளிகளை மீண்டுமாக திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு வசதியாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உட்பட 100% ஊழியர்களுக்கு வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் தடுப்பூசி போடப்படும் எனவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மத்திய பிரதேச உயர் கல்வித்துறை முன்னெடுத்துள்ள இந்த தடுப்பூசி பணிகளில், சிறப்பு குழு அமைக்கப்பட்டு வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக மத்திய பிரதேச மாநிலத்தின் தலைமை செயலாளர் இக்பால் சிங் பெயின்ஸ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான தடுப்பூசி போடுவதற்கு வேண்டிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் எந்தவொரு இடையூறும் இல்லாமல் இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதையும், அனைவருக்கும் தடுப்பூசி போடுவதையும் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தடுப்பூசி போடும் திட்டம் குறித்த கடிதங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் உட்பட மற்ற ஊழியர்கள் அனைவரும் இந்த முகாம்களில் பங்கேற்று சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துள்ள நபர்கள், தங்கள் ஆதார் அட்டை அல்லது அதன் நகலை பதிவு செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள், முதல் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews