Breaking

Friday, July 02, 2021

ஆகஸ்ட் 1 இல் நடைபெற உள்ள நீட் தேர்வு ஒத்திவைப்பு? அரசு ஆலோசனை!

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மத்திய அரசின் நீட் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக அந்த தேர்வை ஒத்தி வைப்பது தொடர்பாக ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

நீட் தேர்வு:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் 10,12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள், சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய மத்திய அரசு தேர்வுகளான ஜேஇஇ, நீட் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதனால் நீட் தேர்வு வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடத்தப்படும் என நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நீட் தேர்விற்கு பல மாணவர்கள் விண்ணப்பங்கள் அனுப்பவில்லை. இதனால் இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை ஒத்தி வைப்பது தொடர்பாக ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக விண்ணப்பங்கள் இன்னும் பெறப்படவில்லை இதனால் இந்த தேர்வை ஒத்திவைப்பது குறித்து கல்வி, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog