அரசு உதவி பெறாத பள்ளிகளின் சங்கத்தினர் மாநிலத்தில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று துணை முதல்வர் தினேஷ் சர்மா அவர்களுக்கு, கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
கோரிக்கை கடிதம்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக கடந்த ஆண்டு முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இடையில் கொரோனா பரவல் பாதிப்புகள் சற்று குறைந்து இருந்த சமயங்களில் இரண்டு மாதங்களுக்கு பள்ளிகள் உயர்வகுப்புகளுக்கு மட்டும் செயல்பட்டது. பின்னர் நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பாதிப்பு காரணமாக தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. இதனால் மீண்டும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. இந்நிலையில், 2021-2022 புதிய கல்வி ஆண்டு நாடு முழுவதும் தொடங்கப்பட்டு, பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களிலும் பாதிப்புகள் குறைந்து உள்ளதால் அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் அரசின் உதவி பெறாத தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர், ஜிம்கள், மால்கள், அரங்கங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள போது பள்ளிகள் ஏன் திறக்கப்படவில்லை. ஏற்கனவே, இரண்டு கொரோனா அலைகளின் காரணமாக மாணவர்களின் கல்வி நிறைய பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்புகள் இல்லாத நிலையில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், ஜூலை 19 முதல் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கும், ஆகஸ்ட் 2 முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்க வேண்டும் என்ற திட்டத்தை அரசுக்கு அனுப்பியுள்ளோம் என்று கூறியுள்ளார்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.