அஞ்சல் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – ஜூலை 15ம் தேதி நேர்காணல்!
தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் அஞ்சல் கோட்டத்தில் காப்பீட்டு முகவர் பணிக்கான நேர்காணல் வரும் ஜூலை 15 ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. தேர்வு செய்யப்படும் முகவர்களுக்கு பாலிசி பிரீமியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் காப்பீடு முகவர்கள்:
இந்தியாவில் அஞ்சல் துறை பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. ஆரம்பத்தில் மக்கள் அஞ்சலகங்கள் மூலம் பண பரிவர்த்தனையை தொடங்கினர். அஞ்சலகங்கள் பல்வேறு காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் மக்கள் எதிர்காலத்தில் பயன் பெறுகின்றனர். அஞ்சலகங்கள் சிறு சேமிப்பு திட்டம் இன்றளவும் பெரும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. அஞ்சலகங்களில் அவ்வப்போது வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. தேர்வு அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது அஞ்சல் காப்பீடு முகவர்களுக்கான நேர்காணல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் அஞ்சல் கோட்டத்தில் காப்பீட்டு முகவர் பணிக்கான நேர்காணல் வரும் ஜூலை 15ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அரக்கோணம் தலைமை அஞ்சல் வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணலின் போது தங்களில் வயது சான்றிதழ் மற்றும் 2 புகைப்படங்கள், ஆதார் அட்டை, உங்கள் முழு விவரம் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். நேர்காணலில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பாலிசி பிரீமியம் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்படுவர் ரூபாய் 5 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். மேலும் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு நேர்காணலில் பங்கேற்பவர்கள் வயது 18 முதல் 50க்குள் இருக்க வேண்டும் என வயது வரம்பு வரையறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் காப்பீட்டு முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் படை வீரர்கள், சுயதொழில் செய்பவர்கள் போன்றோர் பங்கேற்கலாம் எனவும் அரக்கோணம் தலைமை அஞ்சலகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.