147 ஐஐடி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – மத்திய கல்வி அமைச்சர் தகவல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 20, 2021

Comments:0

147 ஐஐடி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – மத்திய கல்வி அமைச்சர் தகவல்!

"நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் மொத்தம் 147 பேராசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்து உள்ளார்.

பேராசிரியர் பணியிடங்கள்:
நாட்டின் உயரிய கல்வி நிறுவனமாக இந்திய தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் உள்ளது. ஐஐடி மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் குடியிருப்பு வசதிகள் வழங்கப்படும். மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக விடுதிகளில் தான் தங்க வேண்டும் என்பது அரசின் நிபந்தனையாகும். மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஐ.ஐ.டி செயல்பட்டு வருகிறது. ஐ.ஐ.டி மாணவர்கள் ஜேஇஇ மற்றும் கேட் போன்ற நுழைவுத் தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேற்று நடந்த மக்களவை கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாட்டின் எந்த மாநிலத்தின் மீதும் மொழி திணிப்பு இருக்காது. மும்மொழி கொள்கை குறித்து மாநில அரசுகள், பிராந்தியங்கள் மற்றும் மாணவர்களின் விருப்பமே இறுதியானது என்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். தொடர்ந்து, ஐ.ஐ.டி களில் மொத்தம் 410 பேராசிரியர் பணியிடங்கள் உள்ளது. காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, பணி நியமனம் செய்யும் நடைமுறை ஓராண்டுகளாக நடக்கும்.

ஐ.ஐ.டி.,க்களில் பேராசிரியர்களாக முன்னாள் ஐ.ஐ.டி மாணவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள் போன்றவர்கள் மட்டுமே சிறப்பு தொகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். 2019ம் ஆண்டில் 209 பேராசிரியர் பணியிடங்கள் இருந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் 48 பணியிடங்கள் நிரப்பப்பட்டது. தற்போது 147 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews