நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளன.
குறிப்பாக, டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல்., டெக் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே, மொத்தம் 1.1 லட்சம் புதியவர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளன. கொரோனா பாதிப்புகளை அடுத்து, அனைத்து வணிகங்களும் டிஜிட்டல்மயமாவதில் ஆர்வம் காட்டி வருவதால், இத்துறையின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டில் 35 ஆயிரம் புதியவர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில், இந்நிறுவனம் 21 ஆயிரம் பேரை பணியில் அமர்த்தியது. விப்ரோ, நடப்பு நிதியாண்டில் 12 ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட 33 சதவீதம் அதிகமாகும். எச்.சி.எல்., டெக் நிறுவனம், 20 - 22 ஆயிரம் பேரை பணியமர்த்த இருப்பதாக தெரிவித்து உள்ளது.டி.சி.எஸ்., நிறுவனம், நடப்பு நிதியாண்டில், 40 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த இருப்பதாக ஏற்கனவே தெரிவித்து உள்ளது. இந்த நான்கு நிறுவனங்களும், ஜூன் காலாண்டில் மட்டும், 48 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பணியமர்த்தி உள்ளன

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.