மதுரை காமராஜர் பல்கலை ரூ.10,000 கட்டண உத்தரவு ரத்து – அறிவிப்பு வெளியீடு!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பாடப்பிரிவுக்கு ரூ.10,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்கிற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டணம் ரத்து:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உட்பட நான்கு மாவட்டங்களில் 180க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் கடந்த ஜூலை 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பல்கலை மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கப்பட்டு, இறுதி மதிப்பெண்கள் மட்டும் பதிவிடாமல் பெறப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உட்பட அதன் கீழ் உள்ள தனியார் கல்லூரிகள், சுயநிதி பாடப் பிரிவுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ரூ.10,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.