தமிழகத்தில் பள்ளிகளுக்கு அருகே புகையிலை விற்பனை செய்ய தடை இருக்கும் நிலையில், திருச்சி மண்டலத்தை சேர்ந்த பகுதிகளில் வசிக்கும் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை போன்ற போதை பொருட்களை விற்பனை செய்ய கூடாது என தடை விதித்து ஐ.ஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
புகையிலை விற்பனை தடை
பள்ளி மாணவர்களுக்கு மது, புகையிலை போன்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை பள்ளி, கல்லூரிகள் இருக்கும் இடங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன் கீழ் திருச்சி மண்டலத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்ய கூடாது என ஐ.ஜி பாலகிருஷ்ணன் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் போதை பொருட்கள் தடுப்புச் சட்டப்பிரிவு 6ன் கீழ் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது சிகரெட், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன் படி திருச்சி மத்திய மண்டலத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் புழக்கத்தை குறைக்கும் வகையில், போதைப் பொருள்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை மீறி 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட், புகையிலை, பான், குட்கா, பான் பராக் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் இது குறித்த விழிப்புணர்வை சில்லறை மற்றும் பெட்டிக்கடை வியாபாரிகளுக்கு ஏற்படுத்த வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.