கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடக்காத நிலையில், ஹரியானா மாநில கல்வி வாரியம் 2021- 2022ம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்களில் 30 சதவீதத்தை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
பாடத்திட்டம் குறைப்பு:
கடந்த கல்வி ஆண்டு முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்புகள் பரவி வருகிறது. இதனால் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்பு மூலம் பாடம் எடுக்கப்படுவது இல்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வந்தது. இதனால் கடந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. மாணவர்களுக்கு மாற்று முறையில் மதிப்பெண் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டது.
தற்போது 2021-2022ம் கல்வி ஆண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. கடுமையான கோவிட் -19 நெறிமுறைகளுக்கு மத்தியில் 9 முதல் 12 வகுப்புகளுக்கு மட்டுமே கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு ஹரியானாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமாக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் 10 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் 30% குறைக்கப்படுவதாக ஹரியானா அரசின் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஹரியானா வாரிய தலைவர் ஜக்பீர் சிங் தெரிவித்தார்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.