நாட்டில் தற்போது காஸ் சிலிண்டரின் விலை கடும் உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது மக்கள் உற்சாகமடையும் வகையில் காஸ் சிலிண்டர் விலையில் அதிகபட்சம் ரூ.800 வரை கேஷ்பேக் அளிக்கப்பட்டுள்ளது.
சமையல் காஸ் சிலிண்டர்:
கடந்த சில மாத காலமாகவே நாட்டில் காஸ் சிலிண்டரின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் இந்த மாதத்திற்கான சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி சுமார் ரூ.825க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் சிலிண்டர் விலை குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு இது பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஆனால் வணிக சிலிண்டரின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டு சமையல் சிலிண்டரின் விலையை குறைக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது பொதுமக்கள் பயடையும் வகையில் பேடிஎம் நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையில் பிரபல செயலியாக திகழ்ந்து வருகிறது பேடிஎம். இந்த செயலி, பயனர்கள் பேடிஎம் மூலம் சிலிண்டர் பதிவு செய்பவர்களுக்கு சலுகை ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி பேடிஎம் செயலி மூலம் முதன்முறையாக சிலிண்டர் பதிவு செய்யும் பயனாளர்களுக்கு அதிகபட்சம் ரூ.800 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிலிண்டரின் விலை சுமார் ரூ.825 என்றால் அதில் ரூ.800 பயனர்கள் கணக்கில் திருப்பி செலுத்தப்படும். இதனால் ஒரு சிலிண்டரின் விலை வெறும் ரூ.25 ஆக குறைந்துள்ளது. இந்த சலுகை வருகின்ற ஜூன் மாதம் 30ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.