நாடு முழுவதும் 5.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – DPIIT அமைப்பு அறிவிப்பு!!
நாட்டில் ஸ்டார்ட் அப் துறையின் மூலமாக புதிதாக அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக DPIIT அமைப்பு அறிவித்துள்ளது.
ஸ்டார்ட் அப் துறை:
இந்தியாவில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இருக்கிறது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்காக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் போதிலும், நாட்டின் ஜிடிபி விகிதம் அதிகரிப்பது சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூலம் தான். இதனால் அதிக அளவினாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்படலாம். தற்போது, நாட்டில் ஓலா, ஸ்விக்கி, உபெர், பர்ஸ்ட், சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் பிரபலமாக உள்ளது. இந்த நிறுவனங்களின் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை நாடு முழுவதும் உருவாக்கி வருகின்றன. இதனால் ஸ்டாப்ட் அப் இந்திய நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. இதுவரையில் இந்த நிறுவனங்களின் மூலம் 5.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.
நாட்டில் இதுவரை 48.093 ஸ்டாப்ட் அப் நிறுவங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் 1.7 லட்சம் மட்டுமே வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. 2020 ஏப்ரல் 1ம் தேதி வரை 19,896 நிறுவனங்கள் அங்கீகரிக்கப் பட்டிருந்ததாகவும் தற்போது ஜூன் 3 2021 வரை 50,000 ஸ்டாப்ட் அப் நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்றிருப்பதாக DPIIT அமைப்பு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.