2021ம் ஆண்டுக்கான இளநிலை நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு குறித்து மத்திய அரசின் முடிவுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
நுழைவுத் தேர்வுகள்:
கொரோனா வைரஸின் பரவல் நாடு முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையினால் 2021ம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதில் சிக்கல்கள் எழுந்துள்ளது. இந்த நுழைவுத் தேர்வுகளை மத்திய அரசின் தேசிய தேர்வுகள் முகமை ஆணையம் நடத்துகிறது. கடந்த ஆண்டில் கொரோனா பரவல் பாதிப்புகள் சற்று குறைந்த நிலைமையில் இந்த இரண்டு தேர்வுகளும் முறையான பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடத்தப்பட்டது. நடப்பு ஆண்டில் இருந்து ஜேஇஇ தேர்வுகளை வருடத்திற்கு நான்கு முறை நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி, மார்ச் மாத தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டது. ஏப்ரல் மற்றும் மே மாத தேர்வுகள் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இளநிலை நீட் தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவதற்கு என்டிஏ திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டை போல் நடப்பு ஆண்டிலும், தேர்வுகளை நடத்துவதற்கு தேர்வு ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மாற்று இருக்கை, தேர்வு அறையில் குறைவான நபர்கள், பகுதி வாரியாக தேர்வு மையங்களுக்கு உள்நுழைதல் மற்றும் வெளியேறுதல் போன்ற செயல்களின் மூலம் தொற்று பாதிப்பை தடுக்கலாம். தேர்வுகள் ஆண்டின் பிற்பகுதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும் தேர்வுகள் கண்டிப்பாக எப்போது நடக்கும் என்பது தெரியாது என்று தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க அல்லது ரத்து செய்யுமாறு தேர்வு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.