2021-22 கல்வி ஆண்டுக்கான மெட்ரிக் பிந்தைய (POST-MATRIC ) கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 02, 2021

Comments:0

2021-22 கல்வி ஆண்டுக்கான மெட்ரிக் பிந்தைய (POST-MATRIC ) கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் இந்திய அரசு
63 லட்சம் மெட்ரிக் பிந்தைய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு
ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கு- கல்வியாண்டு 2021-22 இந்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தேசிய அளவிற்கு இணையாக SC மாணவர்களின் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதத்தை (உயர் கல்வித் துறையில்) உயர்த்த 2021-22 ஆம் ஆண்டில் பட்டியலின மாணவர்களுக்கு 63 லட்சம் மெட்ரிக் பிந்தைய கல்வி உதவித்தொகைகள் வழங்கவிருக்கிறது.

தகுதி:
ஆண்டிற்கு ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெறும் பெற்றோரை உடைய SC பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் XI வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் படித்துக்கொண்டிருக்க வேண்டும். பயன்கள்:
* படிக்கும் காலம் முழுமைக்கும் இந்த உதவித்தொகை பின்வரும் பயன்களை உள்ளடக்கியது:
* கல்வி கட்டணம் உட்பட கட்டாயமாக திருப்பித் தரத்தகாத கட்டனாங்கள்.
* படிக்கும் வகுப்பை பொறுத்து ஆண்டுக்கு 2500 முதல் 13500 வரை கல்வி படிகன், திவ்யாங்(மாற்றுத் திறனாளி) மாணவர்களுக்கு பத்து சதவீதம் கூடுதல் படிகள் வழங்கப்படும். * கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணங்களை முன்கூட்டியே செலுத்தாமல் அனைத்து தகுதி வாய்ந்த மாணவர்களும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற தகுதியுடைவர்கள் ஆவர்.
தகுதியுள்ள மாணவர்களுக்கு கட்டனங்களை முன்கூட்டியே செலுத்தாமல் கல்வி நிறுவனத்தில் படிக்க உதவும் வகையில் மாநில அரசுகளால் ஒரு இலவச அட்டை வழங்கப்படும்.

விண்ணப்பங்கள்:
* தகுதிவாய்ந்த அனைத்து மாணவர்களும் முதல் அழைப்பில் ஏப்ரல் 16, முதல் ஜூன் 30, 2021 வரை மாநில அரசின் ஆன்லைன் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், மாநில அரசின் குறைதீர்க்கும் எண்ணை அழைக்கவும் அல்லது மாநில அரசின் சமூக நல ஆணையரை அணுகவும்.
திட்டம் குறித்து விரிவான வழிகாட்டுதல்களை அறிய இணையதளம் (www.socialjustice.nic.in) பார்க்கவும்.
POST+-METRIC

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84695945