2020 - 21ஆம் கல்வியாண்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் – சார்ந்து - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 31.05.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 01, 2021

Comments:0

2020 - 21ஆம் கல்வியாண்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் – சார்ந்து - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 31.05.2021

IMG_20210601_101050
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6. ந.க.எண். 004010/ ஜெ1 / 2020, நாள், 31 .05.2021

பொருள் : 2020 - 21ஆம் கல்வியாண்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் – சார்ந்து,

பார்வை:
1. அரசாணை நிலை (எண்) 48, பள்ளிக் கல்வித் (அ.தே) துறை, நாள். 25.02.2021
2. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009
பார்வை (1)ல் காணும் அரசாணையில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பெட்ரிருலேசன் பள்ளிகள் மற்றும் கயநிதிப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10, 11-ஆம் வகுப்புகளில் பயிலும் மானராக்கர்கள் அனைவரும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பார்வை (இல் காணும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரியைச்
சட்டம், 2009 பிரிவு-16ல் "எட்டாம் வகுப்பு முடியும் வரையில் எந்தவொரு மாணவளையும் தேக்க நிலையில் வைத்தல் கூடாது. அதாவது அனைவரும் தேர்க்கியது வேண்டும். எந்தக் குழந்தையும் பள்ளியை விட்டு வெளிபெற்றக் கூடாது" என தெரியிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து வகைப் பள்ளிகளில் ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை இணையதளம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேற்படி பள்ளிகளில், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளித் தேர்ச்சிப் பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்க தேவையான அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவயர்களும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இப்பொருள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்களை deesections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிக்கையாக அனுப்பிட அணைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், கோவிட் - 19, பெருந்தொற்று காரணமாக தளர்வில்லா ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. எனவே, தளர்வில்லா ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிமிக்கப்படும். மேலும் மாணாக்கர்களுக்கான விலைவில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் இதா நலத்திட்டங்கள் பள்ளிகள் திறந்தவுடன் வழங்குவது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.
IMG_20210601_101028
IMG_20210601_100951

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84660601