அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை - 14-06-2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 14, 2021

Comments:0

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை - 14-06-2021

காவிரி டெல்டா பகுதிகளில் Hydrocarbon ஏலம் மீண்டும் அறிவிக்கப்பட்டிருப்பது 2020 - பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்திற்கு எதிரானது!
உடனே இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!

'ஹைட்ரோகார்பன்' 'மீத்தேன்' போன்ற பாலைவனமாக திட்டங்கள் காரணமாக மாறிவரும் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கிய டெல்டா மாவட்டங்கள் சோலைவனமாக ஆக்கப்படவேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, அதனை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கும் பொருட்டு, 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம், புதிதாக ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளை தடுக்கும் சட்டமாகும். இந்தச் சூழ்நிலையில், காவேரி வடிநிலைப் பகுதியில் அமைந்துள்ள வடத்தெரு பகுதியில் புதிதாக ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல் அறிவிப்பினை மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 10-6-2021 அன்று வெளியிட்டுள்ளது. அறிவிப்பு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்திற்கு எதிரானது. இந்த மேற்படி மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு 13-6-2021 அன்று கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், காவேரி வடிநிலத்தில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளுக்கு அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், தமிழ்நாடு அரசும் இதனை தொடர்ந்து எதிர்ப்பதாகவும், இது விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும், இதுபோன்ற சூழ்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், வடத்தெரு பகுதியில் புதிதாக ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டிருப்பது தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டு, இது தொடர்பான அறிவிக்கையை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிடுமாறு மாண்புமிகு இந்தியப் பிரதமரை வலியுறுத்தியுள்ளார். இதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது. அதேசமயத்தில், அந்தக் கடிதத்தில், எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலாவது ஹைட்ரோகார்பன் இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்றாலோ அல்லது ஹைட்ரோகார்பன் எடுக்கவேண்டும் என்றாலோ ஆரம்பத்திலேயே தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடத்த மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டுமென்றும் மாண்புமிகு பாரதப் பிரதமரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இந்த வேண்டுகோள் தமிழக விவசாயிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் ஏனென்றால், செயல் டெல்டா என்று நான் மாவட்டங்களைப் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பொறுத்தவரையில், இந்த வேண்டுகோள் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்திற்கு எதிரானது. டெல்டா அல்லாத மாவட்டங்களைப் பொறுத்தவரையில், வம்பை விலை கொடுத்து வாங்கும் முயற்சி என்றே நான் கருதுகிறேன். தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் தேவையில்லை என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இல்லையோ என்ற அச்சத்தை பொதுமக்களிடையே, குறிப்பாக விவசாயப் பெருமக்களிடையே இந்த ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். வேண்டுகோள் மேலும், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே, இந்தச் சட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் மத்திய அரசிற்கு 10-2-2020 அன்று கடிதம் எழுதப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில், மாண்புமிகு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை அமைச்சர் தனது 19-2-2020 நாளிட்ட கடிதத்தில் "... the final decision as to whether to allow any particular project in any particular region would continue to vest with the State Government" rermi குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது, ஒரு குறிப்பிட்ட திட்டத்தை ஒரு குறிப்பிட்ட பகுதியில் அனுமதிப்பது என்பது தொடர்ந்து மாநிலஅரசின் வரம்பிற்குள்ளேயே இருக்கும் என்பது இதன் பொருள். இவையெல்லாம் 20-02-2020 ஆம் நாளிட்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நடவடிக்கைக்குறிப்புகளில் இடம்பெற்றுள்ளன. மத்திய அமைச்சரின் இந்தக் கடிதத்தில் உள்ள அம்சங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடவில்லை. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை அமைச்சர் அவர்கள் எழுதிய கடிதம் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சருக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை என்பதால் இதனைக் குறிப்பிடுவது அவசியம் என நான் கருதுகிறேன். இதனைக் குறிப்பிடுவது தமிழ்நாட்டிற்கு வலு சேர்க்கக்கூடிய ஒன்று என்பது எனது கருத்தாகும். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற 17-ஆம் தேதியன்று மாண்புமிகு இந்தியப் பிரதமரை நேரில் சந்திக்கும்போது, விவசாயிகள் நலன் காக்கும் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்தில் உள்ள கூறுகள் குறித்தும், மத்திய சுற்றுச்சூழல், வனம், மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை அமைச்சரின் கடிதம் குறித்தும், சட்டப்படி தமிழ்நாடு அரசிற்கு உள்ள அதிகாரம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்து, புதிதாக புதுக்கோட்டை மாவட்டம், வடத்தெரு பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews