பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள, அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டு துவங்கியுள்ள நிலையில், பள்ளி கல்வித் துறையின் நிர்வாக பணிகள் துவங்கியுள்ளன.
இதன்படி, கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படித்து முடித்தவர்கள், 'ஆல் பாஸ்' செய்யப்பட்டு, இந்த கல்வி ஆண்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செல்கின்றனர். இந்நிலையில், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், அரசு தேர்வு துறை இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், 'பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு முன்னேறியுள்ள மாணவர்களின் விபரங்களில் திருத்தங்கள் இருந்தால், அதனை மேற்கொண்டு, இறுதி பட்டியல் தயாரிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் அடிப்படையில், பொது தேர்வுக்கான மாணவர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.