கர்நாடக ஆரம்பப்பள்ளி மாணவர்களின் கற்றல் நிலை பாதிப்பு – பெற்றோர்கள் கவலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 07, 2021

Comments:0

கர்நாடக ஆரம்பப்பள்ளி மாணவர்களின் கற்றல் நிலை பாதிப்பு – பெற்றோர்கள் கவலை

கர்நாடகாவில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ஆரம்ப பள்ளி மாணவர்கள் அடிப்படை கற்றல்களை கூட மறந்து விடுகின்றனர் என்று பெற்றோர்கள் தரப்பில் கவலைகள் அதிகரித்துள்ளது. கற்றல் திறன்: கடந்த 2020 மார்ச் மாதம் முதல் நாடு தழுவிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. உயர்நிலை மற்றும் பியூசி மாணவர்களுக்கு இடையில் சிறிது நாட்கள் பள்ளிகள் நடத்தப்பட்டது. ஆனால் துவக்க பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் கூட பள்ளி செயல்படவில்லை. இதனால் துவக்க பள்ளி மாணவர்கள் பாடங்களை சரிவர கற்பதில்லை என்று பெற்றோர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது. பெற்றோர்கள் தரப்பில், ஆன்லைன் பாடங்களில் மாணவர்கள் ஒழுங்காக கலந்து கொள்வதில்லை. கலந்து கொண்டாலும், பாடங்களை கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. கடந்த ஆண்டு முதல் வகுப்பில் படித்த மாணவர்களின் நிலை இன்னும் மோசமாகியுள்ளது. அவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும், பாடங்களை கற்க வேண்டும் என்ற நினைவே இல்லாமல் செயல்படுகின்றனர். துவக்க பள்ளி வகுப்புகளில் தான் மாணவர்கள் அடிப்படை கல்வியான வாசித்தல், எழுதுதல் போன்ற அனைத்தையும் கற்றுக் கொள்வார்கள். தற்போது மாணவர்களின் கற்றல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக கல்வியாளர்கள், ஓராண்டாக மாணவர்கள் பள்ளிக்கு வராத காரணத்தால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் தினமும் மாணவர்களை வாசித்தல், எழுதுதல் பழக்கங்களை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் ‘பிரிட்ஜ் கோர்ஸ் ‘ மூலம் மாணவர்களுக்கு பழைய பாடங்கள் கற்பிக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews