சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் பயிலும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய செயலி ஒன்றை வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து சிபிஎஸ்இ மாணவர்களும் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிபிஎஸ்இ கல்வி வாரியம்:
உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து விட்டது. இதனால் மாணவர்களின் கல்வி மற்றும் மனநலம் மிகவும் பாதிக்கப்படுகிறது. ஆரம்ப வகுப்புகளைக் காட்டிலும் உயர் வகுப்பு மாணவர்கள் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். சிபிஎஸ்இ வாரியம் மாணவர்களின் மனநல ஆரோக்கியத்தை சார்ந்து பள்ளி, குடும்பம் மற்றும் சமூகத்தின் பங்கேற்பு குறித்து விவாதிக்க கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த கையேடு cbse.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மே 10ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் மனநலம் சார்ந்த ஆலோசனைகளுக்காக தோஸ்ட் ஃபார் லைஃப் (Dost for Life) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. மாணவர்களின் சமூகம் மற்றும் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தான் இந்த செயலியின் நோக்கமாகும். தற்போதுள்ள கொரோனா கால சூழ்நிலையில் மாணவர்களின் மனச்சோர்வு, பதட்டம், இணைய அடிமையாதல் கோளாறு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு போன்றவற்றில் இருந்து வெளிவர இந்த செயலி உதவும்.
உலகம் முழுவதும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 83 தன்னார்வலர்கள் உள்ளனர். அதில் 66 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 17 பேர் சவுதி அரேபியா, யுஏஇ, நேபாளம், ஓமான், குவைத், ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார். புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நேரடி ஆலோசனை வழங்கப்படும்.
Search This Blog
Wednesday, May 12, 2021
Comments:0
CBSE 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி வாரியம் வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.