CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? ட்விட்டரில் கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 04, 2021

Comments:0

CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? ட்விட்டரில் கோரிக்கை!

Capture
சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்தது போல், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். பொதுத்தேர்வுகள் ரத்து கோரிக்கை:
சிபிஎஸ்இ வாரியம் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்தது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளி வைத்து உத்தரவிட்டது. சிபிஎஸ்இ வாரியத்தின் அறிவிப்புக்கு பின்னர் தான் நாட்டின் பல கல்வி வாரியங்களும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்தும், தள்ளி வைத்தும் அறிவிப்புகளை வெளியிட்டது. தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பாக தேர்வு அட்டவணை பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகளையும் ரத்து செய்ய மாணவர்கள் சமூக வலைதளங்களில் மத்திய கல்வி அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். மே 1ம் தேதி முதல் ட்விட்டரில் #cancel12thboardexams2021 என்ற பெயரில் கோரிக்கை வைக்கப்பட்டது. மே 2 வரை 10 லட்சம் மாணவர்கள் இந்த ஹாஸ்டேக்- ஐ வலியுறுத்தி உள்ளனர். மேலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு மாற்று மதிப்பீட்டு முறையை கையாள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி வாரியம் திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை குறித்து ஜூன் 1ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ, சிஐசிஇ, என்ஐஓஎஸ் மற்றும் பிற மாநில வாரியங்களில் இருந்து இம்முறை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கோரிக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews