நடுத்தர பள்ளிகளை மேம்படுத்தும் ஸ்டார்ட் அப் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 23, 2021

Comments:0

நடுத்தர பள்ளிகளை மேம்படுத்தும் ஸ்டார்ட் அப்

'ஓயோ மாடல்' என்பது, பல நடுத்தர வசதி ஹோட்டல், தங்கும் விடுதிகளுக்கு தனது 'பிராண்டிங்'கை கொடுத்து, வசதிகள் செய்து கொடுத்ததோடு, தங்கள் இணையதளம் வாயிலாக இணைத்து, அவற்றின் வருமானத்தை பெருக்க உதவி செய்தது. இதனால், இது, உலகளவில் புகழ் பெற்றது. பள்ளிகளுக்கும், இதுபோல், 'பிராண்டிங்' இருந்தால், அது அந்த பள்ளியை தனியாக காட்ட உதவும். ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி, மாணவர்களுக்கு தரமான கல்வி, நல்ல நூலகம், விளையாட்டு வசதிகள், கம்ப்யூட்டர் வசதி போன்றவை தான், 'பிராண்டிங்' பள்ளியை, மற்ற பள்ளிகளிடம் இருந்து, வித்தியாசப்படுத்தி காட்டும்.
தற்போது, பல பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தாலும், கற்றுக் கொடுத்தலுக்கான கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதுதான் மாணவர்களின் தரத்தை பாதிக்கிறது. இதைச் செய்வது தான் தற்போது அடிப்படை தேவை.பள்ளிகளில் இதுபோன்ற வசதிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், பல பள்ளியின் நிறுவனர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இதைத்தான் தன் பொறுப்பில் எடுத்து கொண்டு 'வாவ் (WOW) ஸ்கூல்ஸ்' செய்து வருகிறது. நடுத்தர மற்றும் வசதி குறைந்தவர்களுக்கு நல்ல பள்ளி, கல்வி வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவர்கள் பெரும்பாலும், கட்டணம் குறைந்த, நடுத்தர வசதிகள் உள்ள பள்ளிகளை தான் தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது.சிறிய, -நடுத்தர வசதிகள் உள்ள பள்ளிகளுக்கும் இதுபோன்று, வசதிகள் செய்து கொடுத்து அங்கும், 'பிராண்டிங்' செய்து, தரமான கல்விக்கு வழிவகுத்தால் அந்த பள்ளியின் கல்வித் தரம் உயரும்; நாட்டின் கல்வித்தரமும் உயரும். மாணவர்களுக்கும் குறைவான கட்டணத்தில், நல்ல கல்வி கிடைக்கும் என்ற எண்ணம் தான் இந்த, 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தின் நோக்கம்.
கடந்த ஐந்தாண்டில், 34 ஆயிரத்து, 350 கோடி ரூபாயை, இந்திய நிறுவனங்கள், கல்வி மற்றும் அது சார்ந்த துறைகளில் செலவு செய்துள்ளனர். இவை முறையாக செலவு செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இதுகுறித்தும், கல்வி சார்ந்த நிறுவனங்களுக்கு 'வாவ்' எடுத்து செய்கிறது.'வாவ் ஸ்கூல்ஸ்' என்ற 'ஸ்டார்ட் அப்' சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சமூக ஆர்வலர்கள் பலர் இணைந்து தரமான கல்வி என்ற ஒரே எண்ணத்தில் தங்கள் முழு உழைப்பை கொடுப்பதால் சுமாரான பள்ளிகளும், தரமான மாணவர் சேர்க்கையை, வருங்காலங்களில் எதிர்பார்க்கலாம்.
இவர்களின் இணையதளம் -
www.wow-schools.org

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews