பயிற்சி முடித்தவுடன் மாவட்ட அரசு மருத்துவமனை / ஆரம்ப சுகாதார நிலையம் /தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் தொழில் முறை பயிற்சியுடன் பணியில் சேரலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 28, 2021

4 Comments

பயிற்சி முடித்தவுடன் மாவட்ட அரசு மருத்துவமனை / ஆரம்ப சுகாதார நிலையம் /தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் தொழில் முறை பயிற்சியுடன் பணியில் சேரலாம்!

இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைப்பு அமைச்சகத்தின் பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா (PMKVY 3.0) என்ற பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக சுகாதாரத்துறையில் கோவிட்-19, தொடர்பாக இலவசமாக கீழ்காணும் (Job Role) பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி (ஒரு மாதம்) வழங்கப்பட உள்ளது. அவை,
1. Emergency Medical Technician - Basic
2. General Duty Assistant (GDA)
3. GDA-Advanced (Critical Care)
4. Home Health Aide
5. Medical Equipment Technology Assistant
6. Phlebotomist
பயிற்சி முடித்தவுடன் மாவட்ட அரசு மருத்துவமனை/ஆரம்ப சுகாதார நிலையம்/தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் தொழில் முறை பயிற்சியுடன் பணியில் சேரலாம்.
மேற்காணும் பயிற்சிகளில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை சேரலாம். இந்த பயிற்சிகளில் சேர விரும்புபவர்கள் தங்களது பெயர், கல்வித்தகுதி, பயிற்சியில் சேர விரும்பும் (Job Role) பிரிவு தொலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை dstodpi2020@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9488709322 / 9865538426 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்களது விபரங்களை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தருமபுரி.

4 comments:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews