கரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியத் திட்டம்:மத்திய அரசு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 30, 2021

Comments:0

கரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியத் திட்டம்:மத்திய அரசு அறிவிப்பு

கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.
இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா பாதிப்பால் இறந்தவா்களின் குடும்பத்தினரும் பயனடையும் விதமாக மாநில தொழிலாளா் காப்பீட்டுக் கழக (ஈஎஸ்ஐசி) ஓய்வூதியத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், கரோனா பாதிப்பால் இறந்தவா் ஈட்டிய தினசரி வருவாயின் சராசரியில் 90 சதவீதத்துக்கு நிகராக அவரின் குடும்பத்தினா் ஓய்வூதியப் பலன் பெற அனுமதிக்கப்படுவா். கடந்த ஆண்டு மாா்ச் 24 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு மாா்ச் 24 வரை அமலில் இருக்கும். குடும்ப ஓய்வூதியம், காப்பீட்டு பலன்களை தவிர தொழிலாளா்களின் வைப்புத்தொகையுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு (ஈடிஎல்ஐ) திட்டமும் மேம்படுத்தப்பட்டு அதுதொடா்பான கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் பலன்கள் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு உதவும். கரோனா தொற்றால் உயிரிழந்தவா் முறையான வேலைவாய்ப்பில் இருந்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பு செய்து வந்திருந்தால், அவரின் அடிப்படை ஊதிய விகித அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை ஆயுள் காப்பீடு பெற தகுதியுடையவா் ஆவாா். கரோனா தொற்றால் உயிரிழந்த நபா் தற்காலிகமாக அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்திருந்தால் அவரின் குடும்பத்தினரும் இந்தத் திட்டத்தின் கீழ் பலன்பெறும் வகையில் விதிமுறைகள் தளா்த்தப்பட்டுள்ளன. அதன்படி தொற்றால் உயிரிழந்த நபா் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருந்தாலும் அல்லது அவா் இறப்பதற்கு முந்தைய 12 மாதங்களில் பணியிடம் மாறியிருந்தாலும் அவரின் குடும்பத்தினருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews