தன்னாட்சி அந்தஸ்து கேட்கும் கல்லூரிகளின் விண்ணப்பங்கள் மீது தகுதி அடிப்படையில் பல்கலைக்கழக மானிய குழு சுதந்திரமாக முடிவு செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் உத்தரவு: சமீபத்தில் தனியார் கல்லூரி ஒன்று தங்களது கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் பல்கலைக்கழக மானிய குழுவிடம் அனுப்பப்பட வேண்டும். ஆனால் அந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறைவு, தேர்ச்சி விகிதம் குறைவு என பல்வேறு காரணங்களை காட்டி அண்ணா பல்கலைக்கழகம் இந்த விண்ணப்பத்தை நிராகரித்தது. இந்நிலையில் அந்த கல்லூரி அண்ணா பல்கலை நிராகரித்ததை எதிர்த்தும், விண்ணப்பத்தை பரிசீலிக்க, யு.ஜி.சி.,க்கு உத்தரவிடக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தன்னாட்சி அந்தஸ்து கோரும் விண்ணப்பங்களை, சுதந்திரமாக யு.ஜி.சி., பரிசீலிக்க எந்த தடையும் இல்லை. இந்த விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட பல்கலை வழியாக விண்ணப்பங்கள் வர வேண்டும். அந்த விண்ணப்பங்களை, பரிந்துரைகளுடன் யு.ஜி.சி.,க்கு அனுப்பலாம் அல்லது காரணங்களை குறிப்பிட்டு பல்கலை நிராகரிக்கலாம் என தெரிவித்தது. அண்ணா பல்கலைகழகம் இந்த விண்ணப்பத்தை நிராகரித்தாலும் அதனை பல்கலைக்கழக மானிய குழுவிற்கு அனுப்ப வேண்டும். இந்த இரண்டு காரணங்களும், விண்ணப்பத்தை நிராகரிக்க சரியான காரணங்களா? என்பதை பல்கலைக்கழக மானிய குழு தான் முடிவு செய்ய முடியும், அவ்வாறு பரிசீலனை செய்யும் போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கருத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.