ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிபுரிய லேப், எக்ஸ்ரே டெக்னிஷியன்களுக்கு நேர்காணல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 06, 2021

Comments:0

ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிபுரிய லேப், எக்ஸ்ரே டெக்னிஷியன்களுக்கு நேர்காணல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு காலம் பணிபுரிய லேப் டெக்னிசியன் மற்றும் எக்ஸ்ரே டெக்னிசியன் வேலைக்கு 6, 7ம் தேதிகளில் நேர்காணல் நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிரித்து வருகிறது. அதைப்போன்று சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே 12,500க்கும் மேற்ப்பட்ட முன்களப்பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணிநியனம் செய்து கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதைப்போன்று கடந்த வாரம் டாக்டர்கள், செவிலியர்கள் 320 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் பணிபுரிய மருத்துவர்கள் தேவை என்பதால் முதுகலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வை 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாகப் பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தது. மேலும் தமிழகத்தில் பயிற்சி மருத்துவர்களையும், இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களையும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள லேப் டெக்னிஷியன்கள் மற்றும் எக்ஸ்ரே டெக்னிஷியன்கள் தேவை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் இந்த நேர்காணலில் தேர்வு செய்யப்படுபவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு காலம் பணிபுரிய வேண்டும். லேப் டெக்னிஷியன் மாத ஊதியம் ₹15,000, எக்ஸ்ரே டெக்னிஷியன் மாத ஊதியம் 20,000 ஆகும். இந்த பணியில் கலந்துகொள்ள விரும்புவோர் 6, 7ம் தேதிகளில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews