Breaking

Sunday, May 02, 2021

1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் – கேரள பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

கேரள மாநிலத்தில் அதிகரித்து வரும் நோய் தொற்று காரணமாக பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே தேர்வுகளை எழுதும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி தேர்வுகள்: நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. தவிர மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் தீவிரமடையும் நோய்த்தொற்று காரணமாக தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் குறித்து கேரள பள்ளிக் கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கேரள மாநிலத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. அந்த மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள் இல்லாமல் அவர்களின் படிப்பு திறனை சோதிக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகளை எழுதுவதற்கு மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களுக்கு உதவி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர இந்த தேர்வுக்கான வினாத்தாள்களில், ஒவ்வொரு பாடங்களிலும் இருந்து 20 டாஸ்குகள் கேட்கப்பட்டிருக்கும். அதை பின்பற்றி மாணவர்கள் தேர்வுகளை எழுதிய பிறகு, பத்து நாட்களுக்குள்ளாக ஆசிரியர்கள் அந்த வினாத்தாள்களை திருத்தி உரிய இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog