ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு, வரும், 25ல் நடக்க இருந்த பொது நுழைவுத் தேர்வு, கொரோனா தொற்று பரவல் காரணமாக, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள, ராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய ராணுவத்தில், தொழில்நுட்பம், செவிலிய உதவியாளர், கிளார்க் உட்பட, ஆறு வகை பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம், 2020 ஏப்ரல், 15 முதல், 25ம் தேதி வரை, திருவண்ணாமலையில் உள்ள, அருணை இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது.ஏராளமானோர் விண்ணப்பித்தனர். கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட ஆள் சேர்ப்பு முகாம், இந்தாண்டு, பிப்., 10 முதல், 26ம் தேதி வரை நடந்தது. இந்த முகாமில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, சென்னை மாநில கல்லுாரியில், 25ம் தேதி, பொது நுழைவுத் தேர்வு நடைபெற இருந்தது.
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால், இந்த தேர்வு, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் புதிய தேதி, http://www.joinindianarmy.nic.in என்ற, ராணுவ இணையதளத்தில் அறிவிக்கப்படும்.புதிய தேதி அறிவிப்புக்கு பின், சென்னையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தில், விண்ணப்பதாரர்கள் நேரில் வந்து, தேர்வு எழுதுவதற்கான புதிய அனுமதி அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Search This Blog
Tuesday, April 20, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.