திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிக்கு வந்த உடற்கல்வி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, திருவேகம்பத்தூரை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (40) .
இவர் வாராப்பூர் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இன்று நடக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பணியாற்ற
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரையூர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச்சாவடி அலுவலராக பணி ஒதுக்கப்பட்டது.
பணி ஒதுக்கப்பட்ட இடத்தில் ரஜினிகாந்த் பணியாற்ற வந்த நிலையில் இன்று காலை திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் பணியாற்றிய ஊழியர்கள் ரஜினிகாந்தை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து கண்டவரயான்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில்,
உயிரிழந்த ரஜினிகாந்தின் உடல் கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாற்று அலுவலர் பணிக்கு அனுப்பப்பட்டு வாக்குசாவடி மையத்தில் வாக்குபதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.
Tuesday, April 06, 2021
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிக்கு வந்த உடற்கல்வி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.