அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி இலவசம். - தமிழக அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 22, 2021

Comments:0

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி இலவசம். - தமிழக அரசு

தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இலவச தடுப்பூசி முகாமில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல் கூறியுள்ளது.
தமிழகத்தில் மே 1 முதல் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்.
அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அறிவுறுத்தல்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி இலவசம்.
- தமிழக அரசு
நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது அவசியமான உத்தியாக கருதப்படுவதால் கீழ்க்காணும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுகிறது.
1) தற்போது 45 வயது முதல் 59 வரை 13 சதவீதமும், 60 வயதுக்கு மேல் 18 சதவீதமும் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், 45 வயதிற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி போடும் பணி மேலும் தீவிரப்படுத்தப்படும். 2) 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு தற்போது அனுமதித்துள்ளது. எனவே, முக்கிய தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் (Hotels), உணவகங்கள் (Restaurants) போன்றவை தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து 100 சதவீதம் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க ஊக்குவிக்கப்படுவதுடன், ஏற்கெனவே அறிவித்தபடி இலவசமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பொருட்டு 18 முதல் 45 வயது வரை உள்ள அனைத்து கட்டிடத் தொழிலாளர்கள், வெளி மாநில தொழிலாளர்கள், அனைத்து மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனைக் கடை வியாபாரிகள், மாநில போக்குவரத்துக்கழக ஊழியர்கள், அனைத்து அரசு ஊழியர்கள், அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அனைத்து ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோருக்கு முன்னுரிமையில் தடுப்பூசி இலவசமாக வழங்க, இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மே 1 தேதி முதல் நடத்தப்படும். அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான செலவை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். தமிழ்நாட்டில் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் இந்த முகாம்கள் நடத்தப்படும்.
3) நோய்த்தொற்று உடையவர்களுடன் தொடர்புடையவர்களை உடனுக்குடன் கண்டறிந்து சோதனைக்குட்படுத்தினால்தான் (contact tracing) நோய்த்தொற்று மேலும் பரவுவதை தடுக்க இயலும். எனவே, இந்தப்பணி மேலும் தீவிரப்படுத்தப்படும். 4) கொரோனா RT-PCR பரிசோதனைகள், தேவைக்கேற்ப மேலும் உயர்த்தப்படும். இதன் மூலம் நோய்த்தொற்று விகிதம் அனைத்து மாவட்டங்களிலும் 10 சதவீதத்திற்கு கீழ் குறைக்கப்படும்.
5) மாவட்டந்தோறும் நோய் பரவல் நிலைக்கு ஏற்ப, மருத்துவ கட்டமைப்பு வசதிகளும், பிராணவாயு வசதியுடன் கூடிய படுக்கைகளையும் ஏற்படுத்தி தேவையான மருந்துகளையும் வழங்க மருத்துவ மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews