ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 29, 2021

Comments:0

ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாட்டை சரிசெய்ய, பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல் வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. மாணவர்களிடம் உளவியல் ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை சரிசெய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, உளவியல் நிபுணர்கள் மூலம் குழந்தைகள் மனநலன் தொடர்பான பயிற்சியை ஆசிரியர்களுக்கு அளிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
கல்வி
இதுகுறித்து பள்ளிக் இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கையில், "குழந்தைகளின் மனநலன் தொடர்பான பயிற்சி பெற்று, இடைநிலை ஆசிரிய ராகப் பணி நியமனம் செய்யப்பட்டவர் களின் விவரங்களை துரிதமாக அனுப்பிவைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம் பெறும் ஆசிரியர் களுக்கு, இணையவழியில் கூடுதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் மூலம் இதர ஆசிரியர் களுக்கு பயிற்சி தரவும் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews