ஏப்ரல் 3, 5 உள்ளூர் விடுமுறை - CEO அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 02, 2021

Comments:0

ஏப்ரல் 3, 5 உள்ளூர் விடுமுறை - CEO அறிவிப்பு.

holiday
தஞ்சாவூர் மாவட்டத்தில் 03.04.2021 அன்று சட்டமன்றத் தேர்தல் 2021 பயிற்சி வகுப்புகள் அனைத்து நிலையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8 பயிற்சி மையங்களில் நடைபெறவுள்ளது. 01,04.2021 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து பணிநியமன ஆணைகள் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சார்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆணைகளைப் பெற்ற தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தவறாமல் 03.04.2021 அன்று பயிற்சியில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ஏற்கனவே முதலிரண்டு பயிற்சிகளில் கலந்து கொண்ட இதர பணியாளர்கள் பயிற்சியில் வழங்கப்பட்ட அறிவுரைப்படி 05.04.2021 அன்று அவர்களுக்குரிய பயிற்சி மையத்திற்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாமல் தேர்தல் பணியினைத் தொடர்ந்து புறக்கணிக்கும் அலுவலர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 ஐ மீறியதாகக் கருதப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும். பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் பயிற்சியில் தவறாமல் கலந்து கொள்ள ஏதுவாகவும் , தேர்தல் பணியில் கலந்து கொள்ள ஏதுவாகவும் 03.04.2021 மற்றும் 05.04.2021 ஆகிய நாட்களுக்கு தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் பார்வை / ( 1 ) இல் காணும் செயல்முறைகளின் படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
IMG-20210402-WA0001

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84634996