மைக்ரோஸ் கோப் பயன்படுத்த தடை
பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு கொரோனா தடுப்புக்காக 23 வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நடக்கும் அனைத்து மையங்களிலும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை யும் தூய்மைப் பணிகள் செய்ய வேண்டும். மாண வர்கள் இடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். செய்முறை தேர்வில் ஒவ்வொரு பிரிவிலும் 25 மாணவர்களுக்கு குறையாமல் பங்கேற்க செய்ய வேண்டும். மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும், அதற்கான தேதியை மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் கொரோனா பாதிக்கப்பட்ட மண்டலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு வேறு பள்ளிகளில் தேர்வு நடத்த வேண்டும். வேதியியல் செய்முறை தேர்வில் பிப்பெட் உபகரணத்தை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது, வாய் வழியாக ரசாயனங்களை உறிஞ்சும் கருவிகளை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது. அதேபோல, தாவர வியல் மற்றும் உயிரியல் பாட செய்முறைத் தேர்வில் மைக்ரோஸ்கோப்பை மாணவர்கள் பயன்படுத்த அனும திக்க கூடாது. அதில் மாணவர்கள் கண் வைத்து பார்க்க வேண்டி இருப்பதால், மைக்ரோஸ்கோப்புக்கு தடை விதிக்க வேண்டும். இது போல 23 விதிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் கண் டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.