கொரோனா பரவல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரியானா அரசு அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அக மதிப்பீடு அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்றும் மாநில கல்வி அமைச்சர் தகவல் அளித்துள்ளார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுதேதி அறிவிப்பின்றி ஒத்திவைக்கப்படுவதாக அரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.
ஒடிசா: கொரோனா பரவலை அடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாநில அரசு ஒத்தி வைத்தது. 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப்பில் கொரோனா தீவிரமடைந்துள்ளதை அடுத்து பள்ளிகளில் 5,8,10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதாமலேயே 10ம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதால் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.