புதுச்சேரி பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நோக்கில் NMMS தேர்வுகான விண்ணப்பங்கள் மார்ச் மாதம் 10 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
NMMS தேர்வு:
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகின்றன. இந்த உதவித்தொகை பெறும் மாணவர்கள் தகுதி தேர்வுகள் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணியிடங்களுக்கான தேர்வுகளில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரை ஆண்டு தோறும் உதவித்தொகை வழங்கப்படுகின்றன.
இந்த உதவித்தொகை பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க டில்லி மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலமாக வழங்கப்படுகின்றன. இத்தேர்வு புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட நான்கு பகுதிகளில் (புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம்) மார்ச் மாதம் 28ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு மூலமாக 125 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டுதோறும் ரூ.12 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் அவர்களது பள்ளிகள் மூலமாக nmmsntspdy.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அனுப்ப மார்ச் 10 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, March 06, 2021
புதுச்சேரி பள்ளிகளில் NMMS தேர்வுகள் – மார்ச் 10 ஆம் தேதி கடைசி நாள்
NMMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.