சம்பளம் வழங்காததை கண்டித்து பல்கலை ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 12, 2021

Comments:0

சம்பளம் வழங்காததை கண்டித்து பல்கலை ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

University-teachers-strike-over-non-payment-of-salaries
கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். டெல்லி பல்கலை கழகத்தின் கீழ், 100 சதவீத நிதியுதவி பெற்று இயங்கி வரும் 12 டியூ கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பிற ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து கடந்த இரு தினங்களுகக்கு முன்பாக டியு ஆசிரியர்கள் கூடி ஆலோசித்தனர்.
.com/blogger_img_proxy/ 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிப்பு - புதுச்சேரி
கூட்டத்தின் முடிவில், ஆசிரியர்களின் சம்பள பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருப்பதை கண்டித்து நேற்று முதல் பல்கலையை மூட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தை உடனடியாக முதல்வர், துணை நிலை ஆளுநர், துணை வேந்தர், கல்லூரி முதல்வர்கள் மற்றும் 12 கல்லூரிகளின் பங்குதாரர்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்வது என முடிவு செய்யப்பட்டது.அதோடு, தொடர்ச்சியாக பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து, நேற்று டியு ஆசியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
University-teachers-strike-over-non-payment-of-salaries+%25282%2529
இதுபற்றி டியுடிஏ சங்க தலைவர் ரஜீப் ரே கூறுகையில்,”எங்கள் மாணவர்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அதன்காரணமாகவே இதுபோன்ற கடுமையான முடிவுகளை நீண்ட காலமாக எடுக்காமல் இருந்தோம்.
.com/blogger_img_proxy/ தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய உறுதிமொழி படிவம் 13ஏ-ல் சான்றொப்பம் இடும் அதிகாரம் தமிழக அரசின் அனைத்து குரூப் ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கும் வழங்கி அரசாணை
ஆனால், எங்களுக்கு இப்போது வேறு வழியில்லை. எங்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. சம்பந்தப்பட்ட துறை எங்களுக்கான நிலுவைத்தொகையை விடுவித்து சம்பளத்தை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மற்ற பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம். டெல்லி பல்கலையில் மகாசிவராத்தியன்று எங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். மார்ச் 15ம் தேதி முதல் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் வீதியில் இறங்கி போராடுவார்கள்” என்றார். இதனிடையே, போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து டெல்லி பல்கலையின் கரமாச்சாரி சங்கம் மற்றம் மாணவர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஆசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளனர். அதேபோன்று மார்ச் 15 ஆம் தேதி துணைவேந்தர் அலுவலகத்தில் இருந்து முதல்வர் இல்லத்திற்கு ”ஆதிகர் பேரணி” நடத்தவும், மார்ச் 18 அன்று துணைவேந்தர் அலுவலகத்திலிருந்து ஆளுநர் அலுவலகம் நோக்கி மற்றொரு பேரணி நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews