மாநிலத்தில் சுமார் 2.1 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு கிடைப்பதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. வறட்சி பாதிப்பில் உள்ள தாலுகா மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பால், பள்ளிகள் முழுவதும் மூடப்பட்டது. இதன் விளைவாக மதிய உணவை நம்பி பள்ளிக்கு வந்த மாணவர்களின் நிலை மோசமானது. அவரிகளில் சிலர் இன்னும் பசிபட்டினியில் வாடி வருகின்றனர். சில குழந்தைகளே குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர்.
1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிப்பு - புதுச்சேரி
இந்நிலையில் கடந்த 2016-17-ம் ஆண்டு முதல் மாணவர்களில் உணவு தேவை குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 2021-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட அந்த ஆய்வின் முடிவில் சுமார் 2.1 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் காலை உணவின்றி தவிப்பதாக தெரியவந்துள்ளது. ஆய்வு அறிக்கையில், 2016-17 முதல் 2018-19 வரையிலான காலத்தை உள்ளடக்கும் வகையில் இந்த ஆய்வு நியமிக்கப்பட்டது. 2019-20-ம் ஆண்டுக்கான முதன்மை தரவுகள் சேகரிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மறுஆய்வு கூட்டங்கள் ஏதும் நடத்தப்படாததால் அறிக்கை சமீபத்தில் இறுதி செய்யப்பட்டது. அதன் படி சுமார் 5158 மாணவர்களில் குறைந்தது 199 பேருக்கு அரசு பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவு முதல் உணவாக மட்டுமில்லாமல் அந்த நாளுக்கு அவர்கள் உட்கொள்ளும் ஒரே வேளை உணவாகவும் இருந்துள்ளது. அதேபோன்று சுமார் 5158 மாணவர்களில் 2527 மாணவர்களுக்கு மதிய உணவு இரண்டாவது உணவாகும். 49 சதவீதம் மாணவர்களின் நிலை பரிதாபகரமானது, மேலும் 6 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒருவேளை இன்றி தவிக்கும் கொடூரமான நிலையில் உள்ளனர். ஏறக்குறைய அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளில் காலையில் வழங்கப்படும் ‘பால்’ அவர்களுக்கு பயனுள்ளது.

பள்ளிகளில் காலை உணவு வழங்குவதன் அவசியத்தை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பால் மற்றும் மதிய உணவுத் திட்டத்தை காலை உணவாக விரிவுபடுத்த வேண்டும், குறிப்பாக 108 வறட்சியால் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மாணவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான எஸ்ஏஐ இது மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் உள்ள 301 அரசு பள்ளிகளில் 26,489 குழந்தைகளுக்கு காலை உணவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.