6 மாதமாக காத்திருக்கும் மாணவர்கள் - பேராசிரியரின் பிடிவாதத்தால் பாதிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 14, 2021

Comments:0

6 மாதமாக காத்திருக்கும் மாணவர்கள் - பேராசிரியரின் பிடிவாதத்தால் பாதிப்பு!

மதுரை- மதுரை காமராஜ் பல்கலையில், பேராசிரியர் கர்ணமகாராஜன் பிடிவாதத்தால் எம்.டெக்., - திரைப்படம் மற்றும் மின்னணு ஊடகவியல் துறை - படிப்பு முடிந்தும் முடிவுகள் அறிவிக்காததால், மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.இப்பல்கலை, 2015 - 2020, 'பேட்ச்' மாணவர்கள் கடைசி செமஸ்டர் தேர்வு எழுதி, ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிறது.
Declaration of the results of the All India Sainik Schools Entrance Exam (AISSEE)-2021 - PDF
இதற்கான மதிப்பெண் தயாரிப்பு பணி முடிந்து, சி.பி.சி.எஸ்., செக் ஷன் பிரிவில் சமர்ப்பிக்க, அத்துறை தலைவராக இருந்த கர்ணமகாராஜன் கையெழுத்திடவில்லை. இதனால், தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காரணம் என்ன? கேரளா ஆராய்ச்சி மாணவிக்கு கர்ணமகாராஜன் பிஎச்.டி., வழிகாட்டியாக - கைடு - இருந்தபோது பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், பிஎச்.டி., படிப்பிற்காக லஞ்சம் பெற்றதாகவும், அவர் மீது, 2018ல் அந்த மாணவி குற்றம் சாட்டினார்.பல்கலை ஐ.சி.சி., குழு நடத்திய விசாரணையில், 2015 - 2020, 'பேட்ச்' மாணவர்கள் சிலர் சாட்சி அளித்துள்ளனர். இதையடுத்து, சிண்டிகேட் முடிவுப்படி கர்ணமகாராஜன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.அதன்பின், நீதிமன்றம் சென்று, அதற்கு இடைக்கால தடை பெற்றார். ஆனால், பல்கலை மற்றும் ஆராய்ச்சி மாணவி தரப்பில், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
Flash News: ALL INDIA SAINIK SCHOOLS ENTRANCE EXAM (AISSEE - 2021) Result Published - Direct Link Click Here
எனினும், 'இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி மாணவியோ, சாட்சியளித்த மாணவர்களோ எவ்வகையிலும் பாதிக்க கூடாது' என, நீதிமன்றம் எச்சரித்துள்ளது.பலர் பாதிப்புஆனால், தேர்வு முடிவு, 'மினிட்'டில் கர்ணமகாராஜன் கையெழுத்திடாமல் பிடிவாதம் காட்டுகிறார். இந்த ஆண்டில் படித்த மாணவர், மதுரை சாமுவேலுக்கு கல்லுாரி உதவி பேராசிரியர் பணி கிடைத்தும், மதிப்பெண் சான்று கிடைக்காததால், பணியில் சேர முடியவில்லை. இவர் போல் பலர் பாதித்துள்ளனர்.துணைவேந்தர் கிருஷ்ணன் கூறுகையில், ''இதுகுறித்து தற்போது தான், என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.------- எல்லாமே 'பெண்டிங்' மயம் - கிருஷ்ணன் பதவியேற்று மூன்றாவது ஆண்டு நடக்கிறது. ஆனால், பதிவாளர், தேர்வாணையர், டீன், தொலைநிலை கல்வி இயக்குனர், மனிதவள மேம்பாட்டு துறை இயக்குனர் என முக்கிய ரெகுலர் பதவிகள் இதுவரை நிரப்பப்படவில்லை. ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோருக்கான பதவி உயர்வும் நிலுவையில் கிடக்கிறது.'மாஜி' துணைவேந்தர் செல்லத்துரை பதவி காலத்தில் நடந்த பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு முறைகேட்டை விசாரித்து, ஓய்வு நீதிபதி அக்பர் அலி கமிட்டி அறிக்கை தாக்கல் செய்தது.
Declaration of the results of the All India Sainik Schools Entrance Exam (AISSEE)-2021 - PDF
அதன் மீதும் நடவடிக்கை இல்லாதது உட்பட பல, 'பெண்டிங்' விஷயங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.'இவை குறித்து, துணைவேந்தரே சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும். மீதமுள்ள பதவிக்காலத்திலாவது நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்' என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews