அதன் தலைவர் சிவக்குமார் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பிய வேண்டுகோள்: 2016 சட்டசபை தேர்தலில் 4 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். அதில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 380 தபால் ஓட்டுக்கள் பதிவாகின. 25 ஆயிரத்து 883 ஓட்டுக்கள் நிராகரிக்கப்பட்டன. 3 லட்சத்து 4 ஆயிரத்து 497 ஓட்டுக்கள் மட்டுமே செல்லுபடியாகின.தற்போது 25,000 ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு 89 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில் 5 லட்சத்திற்கு அதிகமானவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
தபால் ஓட்டுகளில் செல்லாத ஓட்டுக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் ஏப்., 6ல் ஓட்டுப்பதிவு முடிந்து, மே 2ல் தான் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. எனவே ஓட்டுப்பதிவு முடிந்து 3 நாட்கள் கழித்து ஒவ்வொரு சட்டசபை தொகுதியில் பணியாற்றிய தேர்தல் பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 2 அல்லது 3 ஓட்டுச்சாவடிகள் அமைத்து, மின்னணு ஓட்டுப்பதிவு மெஷின் மூலம் ஓட்டுக்களை பதிவு செய்ய, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.