பிளஸ் 2 செய்முறை தேர்வு அறிவிப்பு - தேர்வு துறை உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 13, 2021

Comments:0

பிளஸ் 2 செய்முறை தேர்வு அறிவிப்பு - தேர்வு துறை உத்தரவு!

பிளஸ் 2 செய்முறை தேர்வை, ஏப்ரல், 16 முதல் நடத்துமாறு, பள்ளி களுக்கு, அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், இந்த ஆண்டு பொது தேர்வு நடத்தப்படுகிறது. மற்ற மாணவர்களுக்கான பொது தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' செய்யப்பட்டு உள்ளனர்.பிளஸ் 2 பொது தேர்வு, மே 3ல் துவங்க உள்ளது. இதற்கு முன், மாணவர்களுக்கு செய்முறை தேர்வை நடத்த வேண்டும். இந்த தேர்வு எப்போது நடக்கும் என, மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். 'தேர்தலுக்கு பின், செய்முறை தேர்வு நடத்தப்படும்' என, நம் நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இந்நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பை, அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டு உள்ளார்.
13.02.2021 (சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்பட அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல் - சார்பு -முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு நடத்துவதற்கான அரசாணைகளை பின்பற்றி, பள்ளிகள் தரப்பில் தேர்வை நடத்த வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஏப்., 8 முதல், 23ம் தேதிக்குள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதையடுத்து, ஏப்ரல் 16 முதல், 23க்குள், பொது பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும். முதன்மை கண்காணிப்பாளர், வேறு பள்ளி ஆசிரியர்கள் அடங்கிய புற தேர்வு கண்காணிப்பாளர், அதே பள்ளி ஆசிரியர்கள் அடங்கிய, அக தேர்வு கண்காணிப்பாளர் குழுவை அமைத்து, தேர்வை நடத்த வேண்டும்.
மாணவர்களின் மதிப்பெண் விபரங்களை பட்டியலிட்டு, ஏப்., 24க்குள், முதன்மை கல்வி அலுவலகத்தில் தவறாமல் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews