ஏப்ரல் 6 -ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு - அனைத்து நிறுவனங்களுக்கும் மாநில தொழிலாளர் நல ஆணையர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 15, 2021

Comments:0

ஏப்ரல் 6 -ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு - அனைத்து நிறுவனங்களுக்கும் மாநில தொழிலாளர் நல ஆணையர் உத்தரவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6 -ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கவேண்டும் என்று அனைத்து நிறுவனங்களுக்கும் மாநில தொழிலாளர் நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
தொழிலாளர் ஆணையரின் செய்தி குறிப்பு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற பேரவைகளுக்கு பொதுத்தேர்தல், மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலிருந்து மக்களவைத் தொகுதிக்கு 39 இடைத்தேர்தல் 06.04.2021 அன்று நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
ஆசிரியர் மற்றும் அனைத்து வேலை வாய்ப்பு செய்திகள்
1951ம் வருட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 1358ன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பிடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளான 06.04.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படவேண்டும் என அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மெட்ராஸ் உயர்நீதிமன்ற 367 பணிகளுக்கு நேரடி தேர்வின் மூலம் தெரிவு செய்வதற்கான அறிவிப்பு.
மேலும் தமிழ்நாட்டில், கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளான 06.04.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக விடுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்விடுப்பு நாளுக்கான ஊதியம், சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும் இருக்கவேண்டும் எனவும் அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews