இந்தியாவில் படிப்படியாகக் குறைந்துவந்த கொரோனாவின் கொடூர தாக்கம் தற்போது அதே வேகத்துடன் முன்னேறி வருகிறது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை, இறப்பு வீதம் திடீரென உயர்ந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு ஒரு வார காலத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. இச்சூழலில் நேற்று தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
அரசு பள்ளிகளுக்கு 4 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் அட்டவணை வெளியீடு
கூட்டம் முடிந்த பின் பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்; இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என அதிரடியாக உத்தரவிட்டார். இந்த உத்தரவினால் தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல் வேகமாகப் பரவிவருகிறது. மாவட்ட எல்லைகளை மூட அரசு மறைமுக உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன். ஆனால் மீண்டும் ஊரடங்கு போடுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார்.
பள்ளி பராமரிப்புக்கான அரசு நிதியில் தலைமை ஆசிரியை செக் மோசடி செய்ததாக போலீசில் புகார்
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா நிலவரங்கள் குறித்துப் பேசினார். அப்போது அவரிடம் மீண்டும் ஊரடங்கு குறித்த கேள்வியெழுப்பியபோது, “அதை அறிவிக்கும் அதிகாரிகள் நாங்கள் இல்லை. வதந்திகளை நம்பாதீர்கள். ஆனால், தயவுசெய்து அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். தொற்று அதிகரித்துவருவதால் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதில் யாரும் அலட்சியம் காட்டக் கூடாது” என்றார்.

ஊரடங்கு அவசியம் தான்!
ReplyDelete