மே 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை.: ஆளுநர் தமிழிசை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 19, 2021

Comments:0

மே 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை.: ஆளுநர் தமிழிசை!

திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அவசர சுற்றறிக்கை - Dt: 19.03.21
புதுச்சேரியில் மார்ச் 22 முதல் 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஆளுநர் தமிழிசை விடுமுறை உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா மீண்டும் அதிகளவில் பரவுவதால் புதுச்சேரியில் மே 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கொரோனா தொற்று குறைந்ததால் பல கட்ட ஆலோசனைகளுக்கு பின் கடந்த புதுச்சேரி அரசின் உத்தரவுபடி கடந்தாண்டு அக்டோபர் 8ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு, தனியார் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. முதலில் 9, 10,11 மற்றும் 12ம்வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு மதியம் 1 மணி வரை வந்து சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் துவக்கி நடத்தப்பட்டன. அதன்பின்னர் அனைத்து வகுப்புகளும் துவங்கப்பட்டன. இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், 2020 - 2021ம் கல்வியாண்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார். மேலும், 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் தமிழக வாரியத்தின் வழிகாட்டுதலின்படி தேர்ச்சி பெறுவார்கள். பள்ளிகள் ஒரு வாரத்தில் 5 நாட்கள் செயல்படும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும். 1 “முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு 2021 மார்ச் 31 வரை பள்ளிகள் செயல்படும். கோடை விடுமுறை 1 ஏப்ரல் 2021 முதல் தொடங்கும். இருப்பினும், அந்தந்த மாநில வாரியங்களின் தேர்வுகளின் அட்டவணைப்படி 10, 11 மற்றும் 12 வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவித்து அரசாரணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், பல்வேறு மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை வரும் திங்கள் கிழமை முதல் மே 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை 5 நாள் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews