கேங்மேன் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக வழக்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 14, 2021

Comments:0

கேங்மேன் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக வழக்கு!

திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த ரங்கராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியில் ஒப்பந்த அடிப்படையில் 3 ஆண்டுகள் பணியாற்றினேன். மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019ல் வெளியானது.
தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை - ஏப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு!
நான் விண்ணப்பித்தேன். உடல் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றதால், எழுத்து தேர்வில் பங்கேற்றேன். இதன் முடிவு கடந்த பிப்ரவரியில் வெளியானது. இதில், 63 மதிப்பெண்கள் பெற்றேன். எனக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கவில்லை. என்னை விட குறைந்த மதிப்பெண் எடுத்த பலர் பணி நியமனம் பெற்றுள்ளனர். கேங்மேன் நியமனத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. எனவே, பணிக்கான அறிவிப்பின்படி, கேங்மேன் பணிக்கு நான் தகுதியானவன் என அறிவித்து என்னை பணி நியமனம் செய்யுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல் திருச்சியை சேர்ந்த ஜானகிராமன் என்பவரும் மனு செய்திருந்தார்.
ஒரே பள்ளியில் 56 மாணவிகள், 1 ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மின்சார வாரிய தலைவர், தலைமை பொறியாளர் ஆகியோர், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews